
தமிழகம்
நான்கு நாட்களுக்குப் பின்னர் காவிரி நீர்வரத்து குறைவு!!-மக்கள் நிம்மதி;
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் தென்னிந்தியா முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் தமிழகத்திற்கு காவிரி நீரானது அதிக அளவில் திறந்து விடப்பட்டது.
அதே வேளையில் தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததால் மேட்டூர் அணை முழுவதும் நிரம்பியதாக காணப்பட்டது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு வரும் காவேரி நீர்வரத்து குறைந்துள்ளதாக தெரிகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவேரி நீர்வரத்து நான்கு நாட்களுக்கு பின்னர் குறைந்துள்ளது.
நான்கு நாட்களாக 1.20 லட்சம் கன அடி நீர் வந்த நிலையில் தற்போது நீர் வரத்து 1.10 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 979 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் அங்கு நீர்மட்டம் 120.39 கனஅடியாக இருக்கிறது.
