+2 தேர்வில் தோல்வி… மாணவி எடுத்த விபரீத முடிவு!

சேலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ரூபாவதி, தாமரைச்செல்வி என இரண்டு மகள்களும், நிஷாந்த் என்று மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களது இளைய மகள் தாமரைச்செல்வி வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 12 மற்றும் 10 வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியாகியது.

இந்நிலையில் மாணவி தாமரைச்செல்வியின் பெற்றோர், காலை தேர்வு முடிவு வந்தவுடன் போன் செய்து சொல்லும்படி கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தாமரைச்செல்வி ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவில்லை.

தேர்வில் தோல்வி அடைந்ததை எண்ணி வருத்தத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த தம்பி அழுது கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் தாமரைச்செல்வி மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment