Connect with us

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி! 8 ஆண்டுகளுக்கு பின்பு உயரும் மின்கட்டணம்.!!

electric meter

தமிழகம்

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி! 8 ஆண்டுகளுக்கு பின்பு உயரும் மின்கட்டணம்.!!

நம் தமிழகத்தில் இன்று மிக அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றினை மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அதன்படி தமிழகத்தில் மின் கட்டணம் உயரும் என்று கூறியுள்ளார். விரைவில் நம் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வரவும், உயர்த்தவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். 28 முறை தமிழகத்தில் மின் கட்டத்தை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று கூறினார். இருப்பினும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்தார்.

42% மின் இணைப்புதாரர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் வழங்குதல் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு கட்டண உயர்வில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

301 முதல் 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூபாய் 147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூபாய் 27.50 உயரும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட உள்ளது.

விசைத்தறிவுகளுக்கு 750 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் உள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 298.50 மின் கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களில் 501 முதல் 600 யூனிடட்டுகளில் பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் 155 உயரும் என்றும் கூறினார். மேலும் ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி கூறினார்.

ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னரே கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்பதையும் தெரிவித்தார்.

42 சதவீதம் மின் இணைப்பு தாருகளுக்கு கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்றும் கூறினார். உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் 40 காசுகள் மட்டுமே உயர்ந்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 65 காசுகள் மின் கட்டணம் உயரும் என்றும், உயர் அழுத்த வணிக பிரிவு நுகர்வோருக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்த்த உத்வேசிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top