தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு ஏற்கனவே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவளித்த நிலையில் தற்போது கேரள முதலமைச்சரும் ஆதரவாளித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முயற்சிக்கு நாடு முழுவதும் விரைவில் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் இதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் கடிதத்திற்கு முதல் நபராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவளித்ட நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறிய போது ஆளுநர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் ஸ்டாலின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மாநில அரசின் செயல்பாட்டை குலைக்கும் வகையில் கூட்டாட்சி கொள்கைகளுக்கு ஆளுநர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றுவது குறித்து பரிசீலனை என்ன செய்வோம் என்றும் அவர் அந்த தெரிவித்துள்ளார்.
பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பாஜக அல்லாத மாநில முதல்வர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எடுத்துள்ளார் என்பதும் அந்த முயற்சிக்கு படிப்படியாக வெற்றி கிடைத்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.