அமைச்சர் உதயநிதிக்காக தயாராகும் புது வீடு; தீயாய் வேலையாகும் “குறிஞ்சி இல்லம்”

புதிதாக விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் இல்லம் தயாராகி வருகிறது.

சென்னை குமாரசாமி ராஜா சாலையில் உள்ள குறிஞ்சி இல்லம் அவருக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் ஸ்டாலினுக்கு குறிஞ்சி இல்லம் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

குறிஞ்சி இல்லம் என்பது பிற அமைச்சர்களின் இல்லங்களை விட விசாலமானது என்பதால் அதை உதயநிதிக்கு ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த இல்லத்தில் சபாநாயகர் அப்பாவு இருந்து வருகிறார்

குறிஞ்சி இல்லத்தை உதயநிதிக்கு ஒதுக்கிவிட்டு அப்பாவுக்கு மலரகம் என்ற இல்லம் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.