அதானி, ஜாக் டோர்சியை அடுத்து ஹிண்டன்பர்க் குறித்த கோடீஸ்வரர் இவர்தான்..!

இந்திய தொழிலதிபர் அதானி, மற்றும் அமெரிக்க தொழில் அதிபர் ஜாக் டோர்சி ஆகியோர்களை குறி வைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த இரண்டு தொழிலதிபர்களின் நிறுவனங்களின் பங்குகள் மிகவும் மோசமாக சரிந்தது என்பதும் உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக ஹிண்டன்பர்க் ஒரு அமெரிக்க தொழில் அதிபரை குறி வைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஹிண்டன்பர்க்  வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமெரிக்க தொழில் அதிபரும் கோடீஸ்வரரான கார் இகான் என்பவரது நிறுவனத்தை பற்றி அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளியான ஒரு சில நிமிடங்களில் பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 20% வீழ்ச்சி அடைந்துள்ளது.

பில்லியனர்   இகானுக்கு இது ஒரு எதிர்பாராத சவாலாக மாறி உள்ளதாகவும் அவரது பங்குதாரர்கள் செயல்பாட்டில் தற்போது ஒரு மாற்றம் தெரிவதாகவும் கூறப்படுகிறது. இகான் எண்டர்பிரைசஸ் குறித்து ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகள் வெளியாகி அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இகான் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அதிக மதிப்பீடு செய்வதாகவும் ஈவுத்தொகை செலுத்த ஒரு கட்டமைப்பை நம்பி இருப்பதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டி உள்ளது. மேலும் இகான் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை செலுத்த பயன்படுத்துகிறது” என்று ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் 20% சரிந்து தற்போது சுமார் 10.2 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஒரு நிறுவனம் பற்றிய நெகட்டிவ் தகவல்களை வெளியிட்டு அந்த இழப்பில் லாபம் பார்ப்பது ஒன்றே ஹிண்டன்பர்க் நோக்கமாக கொண்டுள்ளது என இகான் கூறியுள்ளது. இனிமேல் ஹிண்டன்பர்க் அறிக்கையை பங்குச் சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

நாங்கள் எப்போதும் பொதுவெளியில் ஆதரவாக நிற்பவர்கள் என்றும் எங்கள் நிறுவனம் எந்தவித முறைகேடுகளும் செய்யவில்லை என்றும் எங்கள் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க வதந்தி என்றும் இகான் தெரிவித்துள்ளது. இதை முதலீட்டாளர்கள் எந்த அளவுக்கு நம்புவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.