Connect with us

3 மாதத்திற்கு பின் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும்: இலங்கை பிரதமர் எச்சரிக்கை!!

sri lanka

தமிழகம்

3 மாதத்திற்கு பின் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும்: இலங்கை பிரதமர் எச்சரிக்கை!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. குறிப்பாக பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து இருப்பதால் பொதுமக்கள் கடும் திண்டாட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அந்நாட்டில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றதால் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்தது.

இந்த சூழலில் இன்னும் 3 நாட்களில் எரி பொருள் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட இருப்பதாகவும் இதனால் மக்கள் அனைவரும் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை உருவாகும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

குறிப்பாக தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாகவும் இது கிடைக்காத பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிடும் என அவர் கூறினார்.

எனவே விவசாயத்திற்கு தேவையான போதிய உரங்கள் இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் வரை நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும் அதன்பிறகு பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படலாம் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top