2000 முதல் 2020 வரை படித்த பட்டங்கள் செல்லாது: அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

2000ம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுகள் படித்த பள்ளி படிப்பு, பட்டப்படிப்பு உள்பட எந்த படிப்பும் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கை ஓங்கியது என்பதும் ஆப்கானிஸ்தான் அதிபர் அதிபர் நாட்டை விட்டு ஓடிய பின்னர் தாலிபான்கள் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாலிபான்கள் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் பட்டு வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் அதாவது 2000ம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் படித்து பெற்றதால் எந்த பயனும் இல்லை என தாலிபான்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆப்கன் அரசின் கல்வித்துறை அமைச்சர் இதனை கூறியுள்ள நிலையில் கஷ்டப்பட்டு படித்துப் பட்டம் பெற்ற மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மத ரீதியிலான படிப்பைத் தவிர மற்ற பட்டபடிப்புகள் முனைவர் பட்டங்களை மதிப்பு குறைவு என்றும் தாலிபான்கள் தரப்பு கூறியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment