பள்ளியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு: 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பள்ளியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 16 மாணவர்கள் பலியானதாகவும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் ஆட்சியை தொடங்கியதிலிருந்தே அவ்வப்போது வெடிகுண்டுகள் வெடித்து வருகின்றன என்பதும் அது மட்டுமன்றி பெண்கள் உள்பட மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

afghanistan 1
 

இந்த நிலையில் நேற்று பள்ளி ஒன்றில் திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானதாக கூறப்படுகிறது. மேலும் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பிற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அனைத்து குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்குச் செல்ல உரிமை உண்டு என்றும் அந்த உரிமையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.