
News
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1000 ஆக அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் கோஸ்ட் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 வரையில் பதிவானது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கோஸ்ட், பக்டிகா மாகாணங்களில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 950-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், நிலநடுக்கத்தால் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
