உச்சகட்ட பரபரப்பு!! அதிமுக தரப்பில் ஓபிஎஸ்-க்கு வக்கீல் நோட்டீஸ்!!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஓ.பி.எஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரையில் ஒன்றை தலைமை விவகாரம் என்பது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. குறிப்பாக ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தொண்டர்கள் மத்தியில் தேர்வு செய்யப்பட்டார்.

உச்சகட்ட பரபரப்பு!! அதிமுக தரப்பில் ஓபிஎஸ்-க்கு வக்கீல் நோட்டீஸ்!!

இத்தகைய அறிவிப்பாக ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இதனால் பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அடுத்த 12 மணி நேரத்தில்! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

இந்த சூழலில் கட்சியின் தலைமை அலுவலகத்தின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்பதை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனை எதிர்க்கும் வகையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் அதிமுகவின் பொறுப்பு இபிஎஸ் பக்கம் இருப்பதால் ஓபிஎஸ் இது போன்ற செயல்படுவது குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.