Connect with us

இன்று ஆலோசனை: 1-8ஆம் வகுப்புகள் வகுப்புகள் எப்போது?

Tamil Nadu

இன்று ஆலோசனை: 1-8ஆம் வகுப்புகள் வகுப்புகள் எப்போது?

74b5d96b5a4526a45b388a6f7a7ccefd

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசனை இன்று நடைபெறுகிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்த முடிவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அனேகமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 5 வகுப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top