நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க அறிவுரை: பள்ளிக்கல்வித் துறை

f5056b6f599c4adbe095648af8da2cab

நீட் தேர்வுக்கு மாணவர்கள் அவரவர் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்குமாறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் தற்போது தீர்ந்து செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது. நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்றும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு பெற்று தருவோம் என்றும் திமுக அரசு கூறிக் கொண்டிருந்த நிலையில் தற்போது நீட் தேர்வு உறுதி என்பதால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் அவரவர் பள்ளியில் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு உரிய நடைமுறையை பின்பற்றி ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை கூறியுள்ளது

அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டும் இட ஒதுக்கீடு இருக்கலாம் என்பதால் அதனை எளிதில் நிர்வாகம் செய்ய அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியில் இருந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றி பல மாணவர்கள் பள்ளியின் மூலம் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்களை அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment