நம் தமிழகத்தில் தற்போது மிகவும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் துறையாக காணப்படுகிறது போக்குவரத்து துறை. இது குறித்து ஒவ்வொரு அமைச்சர்களும் சட்டப்பேரவையில் கூறியுள்ளனர்.
ஆயினும் கூட தமிழகத்தின் நகர்ப்புற பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாமல் இலவச பயணம் என்ற திட்டம் நடைமுறையில் தான் உள்ளது. இந்த திட்டத்தால் நகர்ப்புறங்களில் வேலை செய்யும், படிக்கும் பெண்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக சென்னை போன்ற மாநகராட்சிகளில் இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அங்குள்ளோர் கூறிக்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கூட போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது.
இதனை தடுக்கும் விதமாக சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாய் பெருக்க விளம்பர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளின் இருக்கைகளுக்கு பின்புறம் பயணிகள் வெளிநோக்கு கண்ணாடிகளில் விளம்பரம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம், இறங்க வேண்டிய இடம் குறித்து அறிவிப்பு செய்யும்படி ஒலி வடிவிலான விளம்பரம் செய்ய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளிப்புற கூண்டு தகட்டில் விளம்பரங்களை செய்ய சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அனுமதி அளித்துள்ளது.