பழிக்குப்பழி வாங்கிய ‘RCB’…;புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற்றம்!!

நேற்றைய தினம் இரவு 07:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இது நடப்பாண்டின் ஐபிஎல் போட்டிக்கான 49வது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் டாஸ் வென்ற நம் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் ஆர்சிபி வீரர்கள் கிரீஸில் பேட்டிங் செய்து வந்தார்கள். ஓபனிங் ஆர்சிக்கு நல்லதாகவே அமைந்தது.

எதிர்பார்த்த அளவுக்கு டார்கெட் வரும் என்று நினைத்த போது அதை விட சற்று குறைவான ஸ்கோர் கிடைத்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது. இதனால் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற போராடும் இலக்கோடு இறங்கிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தார்கள்.

அதுவும் குறிப்பாக மிடில் ஆர்டர் சிஎஸ்கேவுக்கு சரியாக அமையவில்லை. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. மேலும் வெற்றியோடு 12 புள்ளிகள் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனால் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருந்து ஆர்சிபி 4வது இடத்துக்கு முன்னேறியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.