News
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் அறிக்கை!
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் பல கூட்டணிகள் அமைத்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகமானது பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தற்போது தனது முதல் கட்ட வேட்பாளர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இதில் முதல்வர் பழனிசாமி ,துணை முதல்வர் பன்னீர்செல்வம் போன்றோர் போட்டியிடும் தொகுதி வெளியானது.இந்நிலையில் கட்சியில் பல அமைச்சர்கள் பல மூத்த உறுப்பினர்கள் இருப்பினும் முதல் கட்டமாக நிலக்கோட்டை தொகுதியில் தனித்தொகுதியில் தேன்மொழி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது.
இதனால் அதிமுகமானது பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கும் என அனைத்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
