Connect with us

‘அந்த பதவியும் போச்சு’… ஓபிஎஸுக்கு மேலும் ஒரு குட்டு.. அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!

தமிழகம்

‘அந்த பதவியும் போச்சு’… ஓபிஎஸுக்கு மேலும் ஒரு குட்டு.. அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!

அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தும் பொது செயலாளருக்கு வழங்கி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டதோடு, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பொதுக்குழுவில் முதல் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் முதல் முக்கியமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும், அதிமுக எழுச்சி பெற ஒற்றை தலைமை தேவை. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும், தேர்தல் அதிகாரியை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்வதாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி ஓபிஎஸுடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது மற்றொரு பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வரும் நிலையில், அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தும் பொது செயலாளருக்கு வழங்கி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்சி சொத்துக்களின் பேரில் கடன் வாங்க, கொடுக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே உரிமை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தொடர்ந்து, பொருளாளர் பதவியையும் ஓபிஎஸ் இழந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top