
தமிழகம்
தற்காலிக பொதுச் செயலாளர் ஈபிஎஸ்? பொருளாளர் பதவியில் இருந்து நீக்கமாக ஓபிஎஸ்?
இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள வானரகத்தின் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சரியாக 9.15 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த கூட்டத்தில் அதிமுகவின் இரும்பெரும் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே சற்று முரண்பாடான கருத்துக்கள் ஏற்பட்டது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
அதற்கு பின்பு அவருக்கு எதிராக அதிமுகவில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது வரை அதிமுகவில் பொதுச் செயலாளர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த பொதுச் செயலாளர் பதவிக்கு அனைத்து விதமான அதிகாரங்களும் உள்ளது. அதிமுகவின் பொது செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் தற்காலிக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்வாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இன்றைய பொதுக்குழுவில் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
