Connect with us

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு-விரைந்து விசாரணை முடிக்க அறிவுறுத்தல்;

ADMK Office

தமிழகம்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு-விரைந்து விசாரணை முடிக்க அறிவுறுத்தல்;

ஜூலை 11ம் தேதியை அதிமுகவின் கடைநிலை தொண்டர் வரைக்கும் யாரும் மறக்க முடியாது. ஏனென்றால் அன்றைய தினம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. மேலும் அதிமுக அலுவலகத்தில் முதல் முறையாக பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

காரணம் அன்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு சேர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பும் வழங்கப்படாததால் இருவரின் தொண்டர்களும் மாறி மாறி அலுவலகத்திற்கு முன்பு தாக்கல் நடத்தினர்.

அதன்பின்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான விசாரணையை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தப்பட்டுள்ளது. விசாரணை குறித்த அறிக்கையை செப்டம்பர் 19ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி கூறியுள்ளது.

மேலும் சிபிசிஐடி விசாரணையை விரைந்து மேற்கொள்ள கோரும் சிவி சண்முகம் வழக்கு செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top