Connect with us

‘அதிமுக அலுவலக சாவி’… ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த மனு-இன்று விசாரணை!!

ADMK Office

தமிழகம்

‘அதிமுக அலுவலக சாவி’… ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த மனு-இன்று விசாரணை!!

நேற்றைய தினம் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றதுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்திருந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக அலுவலக சாவி தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு மீது விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏனென்றால் ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் முன்பு ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். மேலும் அவர்கள் சாலை ஓரங்களில் கற்களை வீசி எரிந்து சண்டையிட்டு கொண்டதால் பெரும் பரபரப்பு அந்த இடத்தில் ஏற்பட்டது.

இதனால் போலீசார் அங்கு வந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அலுவலகத்திற்கும் சீல் வைத்து பூட்டினர். இது தொடர்பாக இரு தரப்பிடமும் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அலுவலக சாவி கொடுக்கப்பட்டது.

எனவே ஓபிஎஸ் தரப்பு அலுவலக சார்பில் தொடர்பாக வழக்கு தொடுத்தது. அதிமுக தலைமை அலுவலக ஜாதியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுத்ததற்கு எதிரான ஓ.பன்னீர் செல்வம் இன்று விசாரணை விசாரணைக்கு வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top