
தமிழகம்
இலங்கையில் ராஜபக்சே; தமிழ்நாட்டில்அதிமுக.!! வீழ்ச்சி கன்பார்ம்-மறைமுகமாக சாடிய டிடிவி!!
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவிக் கொண்டு வருகிறது. இதனால் மக்கள் கிளர்ச்சி பாதையில் திரும்பி உள்ளனர். அதன் விளைவாக அதிரடி போராட்டங்களை நாளுக்கு நாள் செய்து கொண்டு வருகின்றனர்.
எனவே இலங்கை அதிபர் ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வமான மாளிகையை விட்டு தப்பித்து ஓடியதாக தகவல் வெளியானது. ஏனென்றால் கலவரக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள பொருள்களை பயன்படுத்தியதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்தன.
இது போன்று தான் தற்போது தமிழகத்தில் அதிமுக உள்ளது என்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இன்றைய தினம் திருச்சியில் செய்தியாளர்கள் சந்தித்த தினகரன் இவ்வாறு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக தற்போது வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.
பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் அதிமுகவினர் உள்ளதாகவும் கூறினார். அப்போதுதான் ராஜபக்சே போன்று செயல்படக்கூடியவர்கள் வீழ்ச்சியை தான் சந்திப்பார்கள் என்று மறைமுகமாக அதிமுகவினரை விமர்சித்து டிடிவி தினகரன் கூறியது பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
