சொந்த பணத்திலிருந்து ரூ.50 லட்சம்… இலங்கை மக்களுக்காக அள்ளிக் கொடுத்த ஓபிஎஸ்!

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்ச ரூபாய் அளிப்பதாக பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதேபோல் தங்களது ஒரு மாத ஊதியத்தை அளிப்பதாக விசிக , பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் பேரவையில் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவிகளை மேற்கொள்ள தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்..

இந்த தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்தனர்.

அதேபோல் ப.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களும் வழங்க உள்ளதாக பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், தனது குடும்ப நிதியிலிருந்து 50 லட்ச ரூபாயை அளிப்பதாகவும் பேரவையில் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment