Connect with us

அதிமுக ஒரு கட்சியே கிடையாது, அது ஒரு கம்பெனி!! போட்டுத்தாக்கிய டிடிவி;

டிடிவி தினகரன்

தமிழகம்

அதிமுக ஒரு கட்சியே கிடையாது, அது ஒரு கம்பெனி!! போட்டுத்தாக்கிய டிடிவி;

பெரும் குழப்பங்கள் மத்தியில் எதிர் கட்சியாக காணப்படுகின்றது அதிமுக. ஏனென்றால் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் தொண்டர்களிடையே அதிக அளவு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக கட்சியை பற்றி அமமுக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அதிமுக ஒரு கட்சி கிடையாது, அது ஒரு கம்பெனி என்று கூறினார்.

அதிமுக கட்சியில் அதிக முதலீடு செய்கிறார்களோ அவர்களுக்கு பொறுப்பு என்றும் கூறினார். மேலும் அதிமுக கட்சியை தேசிய கட்சியாக கூட என்ன கூடாது என்றும் அதனைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார்.

மேலும் திமுக கட்சியை பற்றியும் அவர் கூறினார். திமுக கட்சியினை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான் என்றும் கூறினார். மேலும் அதிமுக கட்சியில் மடியில் கனம் இருப்பதால் அவர்களால் எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத நிலை காணப்படுகிறது என்றும் கூறினார். இவ்வாறு டிடிவி தினகரன் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top