தை பிறந்து விட்டது! அதிமுகவுக்கு வழி பிறந்து விட்டது!!-ஈபிஎஸ்;

நம் தமிழகத்தின் தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது அதிமுக. இந்த கட்சிக்குள் அவ்வப்போது குழப்பங்கள் பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும் எதிர்க்கட்சி தலைவராகிய எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு அறிக்கையினையும் தகவல்களையும் வெளியிட்டு கொண்டு வருவார்.

அந்த வகையில் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் என்ற சபதம் இருப்போம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அதிமுகவுக்கு வழி பிறந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

அதன்படி கிராம மேம்பாட்டிற்காக திமுக எந்த ஒரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் அதிமுகவிற்கு தற்போது வழி பிறந்து விட்டது என்று சேலம் அருகே சிறுவாச்சூரில் பழனிசாமி பேசிக்கொண்டு வருகிறார்.

சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உயர்த்தியும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி கூறியுள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் என்ன பலன் அடைந்தார்கள்? என்று கேள்வியினையும் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ளார்.

இவ்வாறு விடுமுறை தினத்தன்று ஆளும் கட்சியை விமர்சனம் செய்து எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.