அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிய நிதிபதி நியமனம்!!

தற்போது தமிழகத்தின் வலிமையான எதிர் கட்சியாக திகழ்ந்த அதிமுகவில் தற்போது உட்கட்சி நிகழ்வு கொண்டு வருகிறது. ஏனென்றால் ஜூலை 11ஆம் தேதி சென்னை மாநகரத்தில் உள்ள மண்டபத்தில் நடந்த பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து வழக்கும் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் தாண்டி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மாறி மாறி அதிமுக தலைமைச் செயலகத்தில் அடித்துக் கொண்டனர்.

இதன் விளைவாக பொதுக்குழு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் தற்போது புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் பரிந்துரையை நேற்று தலைமை நீதிபதி முனீஸ்வர் பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.

பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் தனி நீதிபதி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment