‘உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிடையாது விளையாட்டு பிள்ளை அமைச்சர் – பதவியின் கண்ணியம் தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் குறித்து உதயநிதி பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிடையாது, விளையாட்டு பிள்ளை அமைச்சர் எனக்கூறினார்.
அவர் அவருக்கு கொடுத்தது தகுதியை மீறிய பதவி, அவர் பதவியின் கண்ணியம் தெரியாமல் வாய்க்கு வந்ததை உலர்வது இளம் கன்று பயம் தெரியாது என்பதை சொல்வது போல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து எல்லாம் மூத்த தலைவர்களையும் அவமானப்படுத்துவதை தான் உதயநிதி விளையாட்டு பிள்ளை செய்து வருகிறது என கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் வழக்குகளுக்கு அஞ்சாதவர்கள் அதிமுகவினர் என்றால், வழக்குகளிக்கு அஞ்சுபவர்கள் திமுகவினர் எனக்கூறினார். சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்களை காக்க திமுக அரசு தவறிவிட்டது, 5 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் மீனவர்களுக்கு என பதில் அளித்துள்ளது என்றும் அதிமுக ஆட்சியில் மீனவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்ததாக குற்றச்சாட்டினார்.