கால்ல போட்டு மிதிக்கிறாங்க… திமுக மீது ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆளும் கட்சியான திமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விதிமீறல்களில் ஈடுபடுவதோடு, ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து நசுக்குவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில்  ஒரு ஜனநாயக அத்துமீறல்களை ஆளும் விடியா திமுக அரசு அரங்கேற்றியுள்ள நிலையில் இதனைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற வகையில் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் செய்த அத்துமீறல்கள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அங்கு 238 பூத் உள்ளது.இந்த 238 பூத்களிலும் எங்கள்  கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் வீடு,வீடாகச் சென்று ஆய்வு செய்யும்போது கிட்டவிட்ட 30 ஆயிரம்பேர்களிலிருந்து 40 ஆயிரம் பேர் வரை ஆளே கிடையாது. ஆட்கள் இல்லாமல் ஓட்டு அங்கு ஒரு போலி அட்டைகளைத் தயாரித்து அந்த 40 வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்றைக்கு விடியா திமுக அரசு இன்றைக்கு அடியாட்களை வைத்துக்கொண்டு வாக்களிக்க உள்ள நிலையை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம்.

பூத்களை கணக்கெடுப்பு செய்யும்போது ஆட்களே இல்லாமல் வாக்குகள் உள்ளது. இதனைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.237 பூத் ரயில்வே காலனியில் மக்களே இல்லை.கிட்டவிட்ட 180  வாக்குகள் இருக்கும். இந்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அங்கு இருக்கும் மக்கள் வேறு இடத்தில் இருந்தால் அவர்களுக்குத் தகவல் தெரிவித்து ஜனநாயக கடமையைச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.

இது மட்டுமல்லாமல் பணப் பட்டுவாடா நடக்கிறது. விதிகள் அனைத்தும் காலில் போட்டு மிதித்து ஜனநாயகத்தை நசுக்குகின்ற வேலையை  திமுக அரசு செய்துகொண்டிருப்பதைத் தெரிவித்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார் எனக்கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.