சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்; அவருடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு
கேள்வி நேரம் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேச முயற்சித்தார். அப்போது பேச நேரம் தருவதாக சபாநாயகர் கூறியதை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கொடுங்கள் என சபாநாயகரிடம் கூறிய முதலமைச்சர், அவர்கள் ஆதாரங்களுடன் கூறினால் நான் பதிலளிக்க தயார் எனத் தெரிவித்தார்.
திமுக கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்த முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு.