
Tamil Nadu
ஈபிஎஸ்-க்கு 60, ஓபிஎஸ்-க்கு 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு?
இன்று காலை முதலே அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் உருவாகி நடந்துகொண்டு வருகிறது. அங்கு அதிமுக தொண்டர்கள் இரு பிரிவினராக பிரிந்து மாறி மாறி தாக்குதல் நடத்தினர்.
மேலும் அங்கு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக மாவட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அதிமுகவின் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
