அதிமுகவிலிருந்து திமுகவிற்கு தாவிய மாவட்ட கவுன்சிலர்,ஒன்றிய கவுன்சிலர்!!

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்புதான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது திமுக. திமுக மட்டுமில்லாமல் அதன் கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.திமுக

அதேசமயம் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கட்சியில் தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் நிலவி கொண்டு வருகிறது.

தற்போது அதிமுக மாவட்ட கவுன்சிலர் திமுகவில் இணைந்து அதிமுகவிற்கு பெரும் இழப்பாக காணப்படுகிறது.

அதன்படி திருமங்கலம் தொகுதி அதிமுக மாவட்ட கவுன்சிலர் செல்வமணி செல்லச்சாமி திமுகவில் இணைந்தார். அவர் திமுகவில் திருமங்கலத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

முகையூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் செந்தில்குமார், அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனால் அதிமுக மாவட்ட கவுன்சிலர் மற்றும் அதிமுக கவுன்சிலர் ஆகிய இருவர் திமுக கட்சியில் இணைந்தது தெரியவந்துள்ளது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகவும் குறைவான இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவிற்கு இது பெரும் இழப்பாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment