கோஷ்டி குழப்பத்தில் அதிமுக! திடீர் என்டராகும் டிடிவி!!ஓபிஎஸ் சொன்னது சரிதான்!!!

சசிகலா டிடிவி பன்னீர்செல்வம்

தற்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக கட்சி இரண்டு பிரிவாக பிரிந்து உள்ளதாக காணப்படுகிறது. ஏனென்றால் நேற்றைய தினம்  சசிகலா  குறித்த கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய பதிலால் அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிடிவி தினகரன்

இந்த நிலையில் அவரைப் பற்றி பலரும் விமர்சித்து வந்தனர். இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தன் கருத்தை கூறியுள்ளார்.அதன்படி இன்றைய தினம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூர் சென்றார்.

அங்கு மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அமமுக  பொதுச்செயலர் டிடிவி தினகரன் அதிமுகவை மீட்க இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று திட்டவட்டமாக உள்ளேன் என்று கூறினார்.

அதோடு மட்டுமில்லாமல் அவரிடம் செய்தியாளர்கள். நேற்றையதினம் சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசியது குறித்து கேள்வி கேட்டதற்கு டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் எப்போதும் நிதானமாக பேசக்கூடியவர் என்று கூறினார்.

சசிகலாவை விமர்சித்த எடப்பாடிக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்திருந்தார் பன்னீர்செல்வம் என்றும் அவர் கூறினார். அதுமட்டுமில்லாமல் சசிகலாவிற்கு ஆதரவாக ஓ. பன்னீர்செல்வம் பேசியது சரியானதே என்றும் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கூறினார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print