பரபரக்கும் தேர்தல் களம்; ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக வேட்பாளர்; கடைசி நாளில் செய்யப்போகும் தரமான சம்பவம்!

அதிமுகவில் இரட்டை இலை சின்னம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு, தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

ஈரோடு மணல் மேடு பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் ஆகியோருடன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.

ஓபிஎஸ் அணி தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால், இரட்டை இலை சின்னம் இவருக்கு உறுதியான நிலையில், இரட்டை இலை சின்னம் பொறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார். வேட்பு மனு தாக்கல் நிறைவு நாளான இன்று நண்பகல் 12 மணிக்கு தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலை போல் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.