நாளை முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: கல்வி இயக்குனர் தகவல்!

5d214b1c46af936243d9c5adb62c1e47

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிளஸ்டூ மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் நாளை முதல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது

ஏற்கனவே ஜூலை 26 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தில் சேர்ந்து கொள்ள நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், www.tngasa.org, www.tngasa.in ஆகிய இணையதளங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment