Connect with us

கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அனுமதி!!

மாணவர்கள்

தமிழகம்

கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அனுமதி!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் மாணவர்களின் கல்வி செலவு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உதவித்தொகை போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையானது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே போல் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 15% மாணவர் சேர்க்கைகள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் கலை, அறிவியல் படிப்புகளில் சேர அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top