Connect with us

திருப்பதி கோவிலில் இன்று முதல் தமிழக பக்தர்களுக்கு அனுமதி!

News

திருப்பதி கோவிலில் இன்று முதல் தமிழக பக்தர்களுக்கு அனுமதி!

1e8bb52c05c1e129c203f60b10067d16

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் தமிழகம் உள்பட மற்ற மாநில பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது

மேலும் இதுவரை தினசரி 2000 பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசனத்திற்காக டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 8000 பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ஒன்பது முப்பது மணி வரை மட்டுமே இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 11.30 மணி வரை இலவச தரிசனம் அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் 12 மணிக்கு ஏகாந்த சேவைக்குப் பின்னர் நடை சாத்தப்படும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது 

இன்று முதல் தமிழகம் உள்பட அனைத்து மாநில மக்களுக்கும் இலவச சேவை அனுமதி வழங்கப்படும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் திருப்பதி கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவரும் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top