22 நாட்களாக நடைபெற்ற கூட்டத் தொடர்; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

நம் தமிழகத்தில் பல நாட்களாக நடைபெற்ற மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்றைய தினத்தோடு நிறைவு பெற்றது. ஏனெனில் ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி மே 10ஆம் தேதி வரை அனைத்து துறையின் மானியக் கோரிக்கைகள் மீது ஒவ்வொன்றாக விவாதம் நடைபெற்றது.

இதில் அவ்வப்போது எதிர்க்கட்சியினர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு. 20 சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

விதிமுறைகளை மீறும் கிராம ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்ட சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 22 நாட்களாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment