Connect with us

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்! நாளை வரை மக்களவை ஒத்திவைப்பு!!

lok sabha

செய்திகள்

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்! நாளை வரை மக்களவை ஒத்திவைப்பு!!

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்! நாளை வரை மக்களவை ஒத்திவைப்பு!!

நாளைய தினம் இந்தியாவிற்கு பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள தினமாக அமைந்துள்ளது. ஏனென்றால் 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதோடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அனைத்து துறைகளிடம் இருந்து கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் பெறப்படும். அதற்காக இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்பிக்கள் பலரும் சூழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு பின்பு இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். 2021-2022 ஆம் நிதி ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top