Connect with us

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தள்ளிவைப்பு.!!-ஹைகோர்ட்

தமிழகம்

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தள்ளிவைப்பு.!!-ஹைகோர்ட்

அரசுப் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகளவு நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக தற்காலிக ஆசிரியர் பதவி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்து கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு இன்றைய தினம் உத்தரவு ஒன்றை ஹை கோர்ட் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதன்படி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது 12, 13-ஆம் தேதியில் அரசு மேல்நிலை ,உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது.

பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின் பதிவு உயர்வு கலந்தாய்வு நடத்த கோரி தலைமை ஆசிரியர்கள் இரண்டு பேர் வழக்கு தொடுத்து இருந்தனர். தலைமை ஆசிரியர்கள் ராஜவேலு, அருள்முருகன் தொடர்ந்து வழக்கில் நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top