15ஆம் தேதி தொடங்கயிருந்த விமானசேவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தற்போது உலகமெங்கும் மிகமிக அச்சத்தை ஏற்படுத்தி வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் கொரோனா வைரஸ். இது ஒரு விதமான மாறுபட்ட தன்மை கொண்டதாக காணப்படுகிறது. இந்தியாவில் இது மூன்றாவது அலையாக கூட இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகின்றன.

ஒமைக்கிரான்

இத்தகைய ஒமைக்ரான் கொரோனா முதலில் தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றியது. அதன் பின்னர் இஸ்ரேல் போன்ற பல நாடுகளுக்கு பரவியது. தற்போது இந்த ஒமைக்ரான் கொரோனா 20 நாடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஆபத்திற்குரிய நாடுகளில் வரும் பயணிகள் மத்தியில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதோடு மட்டுமில்லாமல் விமான போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மத்திய சிவில் விமான இயக்குனரகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment