சினிமாவை தொடர்ந்து விளம்பரத்திலும் கால் பதித்த அதிதி! அதுவும் யாருகூட பாருங்க!

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அவரது தன்னம்பிக்கையான நடிப்பு மற்றும் சிறந்த நடனத் திறன் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்படத் துறையை ஒரே மாதிரியாகக் கவர்ந்துள்ளது.

விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார்.

Aditi Shankar Tamil Actress photos

அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டதாக்க ஹாட் அப்டேட் வர ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது .அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள 2 வது படத்திலேயே அவர் 25 இலட்ச்சம் சம்பளமாக வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியானது பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் ஜெஸிக்கா பாடல்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படங்களில் கலக்கி வந்த அதிதி ஷங்கர்,தற்போழுது விளம்பரங்களிலும் கால் பதிக்க துவங்கிவிட்டார். அதன்படி ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்திருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment