இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அவரது தன்னம்பிக்கையான நடிப்பு மற்றும் சிறந்த நடனத் திறன் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்படத் துறையை ஒரே மாதிரியாகக் கவர்ந்துள்ளது, மேலும் இப்போது அவர் பல சுவாரஸ்யமான செயல்களை செய்து வருகிறார்.
விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி.
அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டதாக்க ஹாட் அப்டேட் வர ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது ,சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் தான் அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.
அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள 2 வது படத்திலேயே அவர் 25 இலட்ச்சம் சம்பளமாக வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அதிதி சினிமாவிற்கு அறிமுகமாகுவதற்கு முன் உள்ள புகைப்படத்தை வைத்து பார்த்தால் தற்போது முற்றிலும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.
ஐபிஜா தீவிவில் சுற்றி திரியும் நயன் – விக்கி ஜோடி ! ரொமான்ஸ் போட்டோஸ் !
அதிதி சங்கர் குடும்பத்துடன் விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி டிடி திருமணத்திற்கு சென்ற போது உள்ள புகைப்படம் தற்போழுது வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து இதுதான் அதிதி சங்கரா என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.