Connect with us

திருமண கோலத்தில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு ட்னஸ் ஆடிய ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி !!

14467DD0 ED38 4826 B4EE 906B8D488184

பொழுதுபோக்கு

திருமண கோலத்தில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு ட்னஸ் ஆடிய ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி !!

தமிழில் ‘மிருகம்’, ‘அரவான்’, ‘ஈரம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இதேபோல், தமிழில் ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.

aadhi nikki galrani

நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் மரகத நாணயம் படத்தில் சேர்ந்து நடித்ததில் பழகி பிடித்து போக அதன் பின் காதலிக்க தொடங்கினார்கள். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற படத்திலும் ஒன்றாக நடித்துள்ளனர்.

பெற்றோர் சம்மதத்துடன் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2022, மே18ம் தேதி அவர்கள் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.இவர்களின் திருமணத்தையொட்டி, நேற்றிரவு மெஹந்தி விழா நடைபெற்றது.

அஜித் ரசிகர்களான ஆதி, நிக்கி ஜோடி , கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் ‘ஏ.கே.61’ படப்பிடிப்பில் நடிகர் அஜித்தை நேரடியாக சந்தித்து நடிகர் ஆதி திருமண அழைப்பிதழை கொடுத்திருந்தார்.

download 2022 05 19T071913.964

இவர்களின் திருமணம் இன்று சென்னையில் பிரபல ஓட்டல் ஒன்றில் நன்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது. அதற்க்கு முன் நேற்றிரவு நிக்கி கல்ராணி, ஆதியின் மெஹந்தி விழா, நிக்கி கல்ராணியின் வீட்டில் நடைபெற்றது.

இந்த விழாவில், இருவரும் அஜித்தின் ‘ஆலுமா, டோலுமா’ பாடலுக்கு நடிகர்கள் நானி, சந்தீப் கிஷன் ஆகியோருடன் இணைந்து நடனமாடினர். இவர்களின் மெஹந்தி விழாவில் நடிகர்கள் ஆர்யா, சாயிஷா, ‘மெட்ரோ’ பட நடிகர் ஷிரிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏகே 61 சூட்டிங் – அஜித்தின் லேட்டஸ்ட் கெட்டப் !! மாஸ் லுக் !!

இதில் நடிகர் மெட்ரோ ஷிரிஷ் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top