அதர்வா அடுத்த படம்… இயக்குநர் யார் தெரியுமா? செம அப்டேட்!…

534aa8670ee012e996c8ccb30d897b05

மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படமான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்தான் மாறா. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

அறிமுக இயக்குநர் திலிப் குமார் இயக்கியுள்ள இப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானது. இந்த படத்தை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கின்றனர். ஆம் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். 

இந்த படத்தை பிரமோத் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சாம் ஆண்டனின்  அறிமுகப் படமான டார்லிங் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடைசியாக நூறு என்ற படத்தில் நடித்திருந்த அதர்வாவுக்கு தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, ருக்குமணி வண்டி வருது போன்ற படங்கள் வரிசையில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.