Connect with us

கூடுதலாக ஒரு பொதுவிடுமுறை நாள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Tamil Nadu

கூடுதலாக ஒரு பொதுவிடுமுறை நாள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

b131cc02ae2803ac9af6314857f8a9c4

இந்த ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை சிங்கப்பூர் மலேசியா மொரீசியஸ் மற்றும் இந்தோசீனா இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது 

14174f1d0c7bf78098d464367f3d8d3a

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். இக் கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்

இவ்வாறு தமிழக முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top