பெங்களூரு-வேளாங்கண்ணிக்கு இடையே கூடுதல் ரயில் சேவை

பெங்களூரு – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.ஆர் பெங்களூரு – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் எண். 06547 கே.எஸ்.ஆர் பெங்களூருவில் இருந்து சனிக்கிழமை காலை 07.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும், ஏப்ரல் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரயில் எண். வேளாங்கண்ணி – கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06548) சனிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு சென்றடையும்.

மேலும் “ரயிலின் நேரம், நிறுத்தங்கள் மற்றும் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இன்று முதல் ரம்ஜான், தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு – சிறப்பு பேருந்துகள்

சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 13, 2023 அன்று (இன்று) காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.