Connect with us

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு!!!

parathur

தமிழகம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மெட்ரோ சிட்டிகளிலும் இரண்டு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சிகளும் இரண்டு விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கான பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் சென்னையில் உள்ள பரந்தூர் பகுதியில் அடுத்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு உள்ள நிலையில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை விலையை விட கூடுதலாக திருப்திகரமாக இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

கையகப்படுத்தும் நிலத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார். விமான நிலையம் முனையம்  மற்றும்  தேவையான உட்கடமைப்பு செய்ய சுமார் 4700 ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகிறது என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இந்த நிலையில் புதிய விமான நிலையம் அமைப்பதால் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார். 360 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள பெரிய நெல்வாய் ஏறி ஆழப் படுத்தப்பட்டு தொடர்ந்து ஏரியாகவே பராமரிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

நிலங்கள் பரப்பு நில அமைப்பு மற்றும் சமூக பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு பறந்தூர் தேர்வு செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார். பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீரோட்டம் எந்தவித தடைக்கும் என்று தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நீர்நிலைகள் விவசாய நிலங்களில் நீர் பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top