மெரினா, வண்டலூர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

d9f01d855527f52cea141d476f7acbf4

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு உள்ளன என்பதும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளான மெரினா, வண்டலூர் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்திருப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதன் காரணமாக கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது

மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக ஏற்கனவே 2500க்கும் மேற்பட்ட பேருந்துகளை சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கி வருவதாகவும் தற்போது கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளான மெரினா கடற்கரை, கோவளம், வண்டலூர் பூங்கா ஆகிய வழித்தடங்களில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளை கூடுதலாக இயக்கி வருவதாகவும் கூட்டம் அதிகரித்தால் இன்னும் கூடுதலாக பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment