டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதிதாக 2,500 காலி பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் நடப்பாண்டில் கட்டாயம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என தேர்வாணையம் தெரிவித்து இருந்தது.
எச்சரிகை; 42 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை..!!
அதன் படி, 7301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இந்நிலையில் 18.5 லட்சம் பேர் தேர்வெழுதியதை அடுத்து தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்த சூழலில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும், ஜனவரி 2-வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுவாரியம் கூறி இருந்தது.
புதிய கொரோனா பரவல்: நாடு முழுவதும் ஒத்திகை தொடக்கம்!!
தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதிதாக 2,500 காலி பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் 9,870 காலி பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.