Connect with us

புது கதையா இருக்கு! கொரோனாவால்தான் கஞ்சா பழக்கம் அதிகரிப்பு – அரிமா சங்கத் தலைவர் பேச்சு

ganja

தமிழகம்

புது கதையா இருக்கு! கொரோனாவால்தான் கஞ்சா பழக்கம் அதிகரிப்பு – அரிமா சங்கத் தலைவர் பேச்சு

கொரோனா பரவல் காலத்தில் ஆசிரியர்களின் வழிநடத்துதல் இல்லாத காரணத்தால் தற்போது கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாகி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுபள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களில் நல்லாசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் விழாவில் அரிமா சங்கத் தலைவர் பேச்சு

செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது ஆசிரியராக பணியாற்றி ஜனாதிபதியாக பதவி உயர்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது இந்த ஆசிரியர் தின விழாவில் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்லாசிரியர்களை தேர்ந்தெடுத்து சென்னையில் வைத்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கம்

இதே போல் தூத்துக்குடி அரிமா சங்கம் சார்பில் தூத்துக்குடியில் நடந்த விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் அரசு பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களில் சுமார் 30 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருது, பதக்கம் அணிவித்து, நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தனர்

இந்த விழாவில் பேசிய அரிமா சங்கத் தலைவர் எஸ் டி ஆர் நிறுவனங்களின் தலைவர் எஸ் டி ஆர் பொன்சீலன் தூத்துக்குடி மாவட்டம் போதை பொருளின் ஒட்டுமொத்த சந்தை ஆகிவிட்டது இதற்கு காரணம் கொரோனா பரவல் காரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த உறவுகள் விடுபட்டு போன காரணத்தால் மாணவர்கள் போதைப் பொருளுக்கு ஆளாகி விட்டனர்.கொரோனா பரவல் காலத்தில் ஆசிரியர்களின் வழிநடத்துதல் இல்லாத காரணத்தால் தற்போது கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாகி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று விஞ்ஞானம் கூறுகிறது தற்போது இந்த போதைப் பொருளால் அக்காள் தங்கை அம்மா என்ற வித்தியாசம் தெரியாமல் மீண்டும் குரங்காக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டது என்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது

இதனைத் தொடர்ந்து வந்திருந்த 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது அரசு தங்களை கௌரவிக்காவிட்டாலும் இது போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எங்களை கௌரவித்தது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது என்று உணர்ச்சி ததும்ப கூறினர்

குடும்பமாக வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு உணவும் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர் ஆசிரியர்கள் தின விழாவில் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்த நிகழ்வு தூத்துக்குடி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top