மார்க் ஸூக்கர் பெர்க்கை முந்தி அதானி,அம்பானி சாதனை! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நம் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் என்று சின்ன குழந்தையை கேட்டாலும் கூட குழந்தை சொல்வது அம்பானி தான். கடந்த சில வருடங்களாக யாராலும் தொட முடியாத அளவிற்கு சொத்து மதிப்புகளை கொண்டவராக அம்பானி வலம் வந்தார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அம்பானியை முந்தி அதானி நிறுவனம் இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற பெயரைப் பெற்று சென்றது. இந்த நிலையில் அம்பானியும் அதானியின் பேஸ்புக் நிறுவனரை சொத்து மதிப்பில் முந்தியதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அதானி, அம்பானியின் சொத்து மதிப்பு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க்-ன் சொத்து மதிப்பை விட அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் அதானிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் தலைவர் அம்பானி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதானியின் சொத்து 9050 கோடி டாலராக உள்ளது. அதே வேளையில் அம்பானியின் சொத்து 8,920 கோடி டாலராக உயர்ந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment